ஆளுமை:பரமேஸ்வரன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமேஸ்வரன்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1944.08.02
இறப்பு 1983.07.21
ஊர் புத்தூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமேஸ்வரன், சுப்பிரமணியம் (1944.08.02 - 1983.07.21) யாழ்ப்பாணம், புத்தூரைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் 1963 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குப் பட்டப் படிப்பிற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.

இவர் பல்கலைக்கழக வெளியீடான ”காலத்தின் குரல்கள்” என்ற மூன்றாவது சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியராகவும் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான ”இளங்கதிர்” சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கினார். இவரது ஆளுமை மிக்க செயற்பாடு அவருக்குப் பல பதவிகளைப் பெற்றுக் கொடுத்தது. இவர் 1969 -1972 காலப்பகுதி வரை தேசிய சேமிப்பு வங்கியின் மேற்பார்வையாளராகவும் 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் முகாமையாளராகவும் பின்னர் செயலாற்று முகாமையாளராகவும் பதவி வகித்தார்.

தமிழ்க் கலைமாணி சிறப்புப் பட்டமும் தமிழ் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றுள்ள இவர், வானொலிக் கலைஞனாக, எழுத்தாளனாக, நாடகக் கலைஞனாக, ஆய்வாளனாக விளங்கியமையால் கலா பரமேஸ்வரன் ” என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது. இவர் நச்சினார்க்கினியாரின் இலக்கியத் திறனாய்வை மேற்கொண்டு முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இவரின் ஆய்வுக் கட்டுரைகள் 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு சேலம் குயில்பண்ணை வெளியீட்டகத்தால் நூலாக வெளியிடப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 56


வெளி இணைப்புக்கள்