ஆளுமை:பஞ்சாட்சரவேல், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஞ்சாட்சரவேல்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1944.11.23
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாட்சரவேல், வேலுப்பிள்ளை (1944.11.23 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் தனது சிறுவயதில் வீரபாண்டிய கட்டப் பொம்மன் ஓரங்க நாடகத்தில் வெள்ளைத் தேவனாக மேடை ஏறினார்.

இவர் 1964 ஆம் ஆண்டு குரும்ப சிட்டியில் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் சோக்க்கிறட்டீஸ் என்ற நாடகத்தில் நடித்து முதல் இடத்தைப் பெற்றார். மேலும் இவர் 1966 ஆம் ஆண்டு சத்தியவான் சாவித்திரி, வட்டுக்கோட்டை கலைமகள் கலைக்குழு சார்பாகக் கண்டிக் காவலன், 1971 இல் இலங்கேஸ்வரன், 1973 இல் சீற்றம், 1974 இல் கல்லறைக் காவலன் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் இவரால் 1975 ஆம் ஆண்டு புங்குடுதீவில் உயிர் ஓவியம் என்ற சரித்திர நாடகம் மேடையேற்றப்பட்டது.

இவரது சேவைக்காக 2008 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 191-192