ஆளுமை:நாகராஜன், வைரமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகராஜன்
தந்தை வைரமுத்து
தாய் இராசம்மாள்
பிறப்பு 1913.05.25
இறப்பு 2012.08.02
ஊர் உடுப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகராஜன், வைரமுத்து (1913.05.25 - 2012.08.02) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைரமுத்து; தாய் இராசம்மாள். இவர் தனது ஆரம்பக் கல்வியை அநுராதபுரம் திருக்குடும்பக் கன்னியர் தமிழ்ப் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை அநுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரியிலும் கற்றார். இவர் மூன்று ஆண்டு காலம் தற்காலிக எழுதுவினைஞராக அநுராதபுரம் இரயில்வே திணைக்களத்திலும் சுகாதாரத் திணைக்களத்திலும் பணியாற்றிப் பின்னர் சமூகசேவைக் கல்வியில் "டிப்ளோமாக்" கற்கைக்காகத் தமிழ்நாடு சென்று பட்டம் பெற்று மீண்டும் இலங்கை திரும்பி அநுராதபுரம் விவேகானந்தா வித்தியாலயத்தில் 1956 ஆம் ஆண்டு தொண்டராசிரியராகப் பணியாற்றினார். இவர் லண்டன் பல்கலைக்கழகத்தின் இடைநிலைக் கலைமாணி, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதனிலைமாணி, தமிழ்நாடு, சென்னை சைவ சித்தாந்த சமாஜத்தின் சைவப் புலவர் பட்டம் போன்றவற்றைப் பெற்றுள்ளார்.

இவர் உதவி ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் கடமையாற்றிப் பல பாடசாலைகளை முன்னேற்றி, இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இருந்து கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, தினபதி, ஒப்சேவர் போன்ற பல பத்திரிகைகளின் செய்தி நிருபராகவும் புகைப்பட நிருபராகவும் செயற்பட்ட இவர், பின்னர் சுதந்திரன், அறிவுக்களஞ்சியம், விளக்கு, மல்லிகை போன்ற சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். மேலும் யாழ்ப்பாண இலக்கிய வட்டம், தெல்லிப்பளை கலை இலக்கியக் களம் போன்ற இலக்கிய அமைப்புகளிலும் தெல்லிப்பளை விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகம், வலிகாமம் பிரஜைகள் குழு ஒன்றியம். வலிகாமம் வடக்கு புனர்வாழ்வுக் கழகம் போன்ற பொது அமைப்புகள் ஊடாகச் சமூகசேவை அங்கத்தவராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் மார்கழி மங்கையர், விநாயகர் மகத்துவம், பட்டரின் அபிராமி மான்மியம், விநாயகர் திருவருள் ஆகிய சமய இலக்கியங்களையும் மாணவர் நல்லுரைக்கோவை, காட்டில் ஒரு வாரம், தேடலும் பதித்தலும், அவன் பெரியவன், சிறுவர் சிந்தனைக் கதைகள், அறிவியல் பேழையில் ஒருசில மணிகள், சிறுவர் கவிதையில் புதிய சிந்தனைகள், சிறுவரும் அவர் தம் அறிவுசார் சாதனங்களும், நோருவல் இருந்து கவிதை அமிழ்தம், அநு.வை.நா.வின் ஒரு காலத்துச் சிறுகதைகள், சிறுவர் பழமொழிக் கதைகள் ஆகிய சிறுவர் இலக்கியங்களையும் எழுதியுள்ளார்.

இவருக்குச் சாகித்திய மண்டலப் பரிசும் இந்து கலாச்சார அமைச்சினால் இலக்கிய வித்தகர் விருதும் வட- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் விருதும், பாராட்டும் கண்ணதாசன் மன்றத்தால் 2004 இல் " இலக்கிய வேந்தர்" விருதும் வழங்கப்பட்டுள்ளன.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 194-197
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 366
  • நூலக எண்: 405 பக்கங்கள் 04-05
  • நூலக எண்: 11663 பக்கங்கள் 52