ஆளுமை:நந்தகோபாலன், வேலாயுதம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நந்தகோபாலன்
தந்தை வேலாயுதம்பிள்ளை
பிறப்பு 1960.12.02
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நந்தகோபாலன், வேலாயுதம்பிள்ளை (1960.12.02 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம்பிள்ளை. இவர் அண்ணாவியார் சரவணமுத்துவிடம் நாடகக் கலையைப் பயின்று 1980 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் சிந்துநடைக்கூத்து, இசை நாடகங்கள் போன்றவற்றில் நடித்ததுடன் 1990 ஆம் ஆண்டில் அண்ணாவியாராகச் செயற்பட்டு வந்துள்ளார். மேலும் இவர் 15 வருடத்திற்கு மேலாகக் காத்தவராயன் சிந்து நடைக்கூத்தை மேடையேற்றி வந்ததுடன் மயானகாண்டம், சம்பூர்ண அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, ஶ்ரீ வள்ளி, பவளக்கொடி போன்ற இசை நாடகங்களை மன்றங்களுக்கும் சங்கக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் நெறிப்படுத்தி மேடையேற்றி வந்துள்ளார்.

இவரது கலைப்பணிக்காக 1993 ஆம் ஆண்டு கற்கோவளம் கும்பி அம்மன் ஆலயத்தினாலும் 1998 ஆம் ஆண்டு பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினாலும் சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தினாலும் 2005 ஆம் ஆண்டு வடமராட்சி வடக்கு பிரதேச கலாச்சாரப் பேரவையினாலும் பொன்னாடை போர்த்தி மகுடம் சூட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 185-186