ஆளுமை:தேவதாஸ், தம்பி ஐயா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தேவதாஸ்
தந்தை தம்பி ஐயா
தாய் ஐஸ்வரி
பிறப்பு 1951.04.24
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவதாஸ், தம்பி ஐயா (1951.04.24 - ) புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர், ஆய்வாளர், ஆசிரியர். இவரது தந்தை தம்பி ஐயா; தாய் ஐஸ்வரி. இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் இலங்கைத் திரைப்படத்துறை தொடர்பான பதிவுகளைத் தொடர்ச்சியாக எழுதிவருவதுடன் இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை (1994), பொன் விழாக் கண்ட சிங்கள சினிமா (1999), இலங்கைத் திரையுலக முன்னோடிகள் (2001), இலங்கைத் திரை உலக சாதனையாளர்கள், குத்துவிளக்கு - மீள்வாசிப்பு (2011), இலங்கைத் திரை இசையின் கதை (2012) ஆகிய இலங்கைத் திரைத்துறை தொடர்பான ஆவண நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவர் புங்குடுதீவு வாழ்வும் வளமும் (2006) என்ற புங்குடுதீவு தொடர்பான விரிவான ஆவண நூலையும் எழுதியுள்ளார். மூன்று சிங்கள நாவல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளதுடன் பழமொழிகள் தொடர்பான சிங்களப் பழமொழிகள், இணைப்பழமொழிகள்: சிங்களம்-தமிழ் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 03-08


வெளி இணைப்புக்கள்