ஆளுமை:தெளிவத்தை யோசேப், சந்தனசாமிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தெளிவத்தை ஜோசப்
தந்தை சந்தனசாமிப்பிள்ளை
தாய் பரிபூரணம்
பிறப்பு 1943.02.16
ஊர் ஊவாக்கட்டவளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தெளிவத்தை ஜோசப், சந்தனசாமிப்பிள்ளை (1943.02.16 - ) பதுளை, ஊவாக்கட்டவளை என்னும் தேயிலைத் தோட்டத்தினைச் சேர்ந்த சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர். இவரது தந்தை சந்தனசாமிப்பிள்ளை; தாய் பரிபூரணம். இவரது இயற்பெயர் ஜோசேப். இவர் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் ஓர் சிறுகதை ஆசிரியனாக எழுத்துலகில் பிரவேசித்துப் பின்னர் ஓர் நாவலாசிரியனாகப் பரிணமித்து, எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர்.

இவர் ஆரம்பத்தில் ஓர் ஆசிரியனாகத் தெளிவத்தை என்னும் இடத்தில் பணிபுரிந்தார். அவ் ஊரின் பெயரே பிற்காலத்தில் அவருடைய இலக்கியப் படைப்புக்களிலும் இணைந்து கொண்டது. இவர் சென்னையிலிருந்து வெளிவந்த சிற்றிலக்கிய ஏடான 'உமா' என்ற சஞ்சிகை அறிமுகப்படுத்திய அட்டைப்படக்கதைப் போட்டியில் வாழைப்பழத்தோல் என்ற தனது முதலாவது கதையை எழுதியதன் மூலம் இலக்கிய உலகில் பாதம் பதித்தவர். இவர் 'புதிய காற்று' என்ற இலங்கைத் திரைப்படத்தின் கதை -வசனகர்த்தாவாகவும் பங்களித்ததுடன் ரூபவாஹினியில் ஒலிபரப்பாகிய காணிக்கை என்ற தொலைக்காட்சி நாடகத்தை உருவாக்கியவர். இவருக்குக் கலாபூஷணம் விருதும் இவர் எழுதிய 'நாமிருக்கும் நாடே' என்னும் சிறுகதைக்கு 2014 இல் 'சாகித்தியா' விருது வழங்கப்பட்டது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 411
  • நூலக எண்: 1663 பக்கங்கள் 75-77
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 115-117
  • நூலக எண்: 3391 பக்கங்கள் 30-32
  • நூலக எண்: 8166 பக்கங்கள் 02-03
  • நூலக எண்: 8852 பக்கங்கள் 03-06
  • நூலக எண்: 13669 பக்கங்கள் 20-22