ஆளுமை:தெய்வேந்திரம், வேலன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தெய்வேந்திரம்
தந்தை வேலன்
பிறப்பு 1957.09.03
ஊர் சரவணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தெய்வேந்திரம், வேலன் (1957.09.03 - ) யாழ்ப்பாணம், சரவணையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலன். இவர் கதிர்காமு, ம. கந்தையா ஆகியோரிடம் நாடகங்கள், கூத்துக்கள் போன்ற கலைகளைப் பயின்று 1970 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் பாடசாலைக் காலத்தில் சமயோசித புத்தி என்னும் நாடகத்தின் மூலம் நாடகக் கலைக்குள் நுழைந்தார். இவர் சரவணை நாடக மன்றத்தின் தலைவராகக் கடமையாற்றியதோடு பக்த நந்தனார், அப்பு முட்டாள், ஏழையின் வாழ்வு, உண்மை சொல்ல வேண்டும், அரிச்சந்திர மயான காண்டம் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.

இவரது கலைத்திறமைக்காக இவருக்கு 1979 ஆம் ஆண்டு யோன் டி சில்வா அரங்கில் பிரதம விருந்து வழங்கப்பட்டதோடு குணச்சித்திர நடிப்பிற்கான சான்றிதழும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 183