ஆளுமை:துஷ்யந்தி, வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துஷ்யந்தி
தந்தை கதிரவேலு
தாய் நவமணி
பிறப்பு 1967.06.14
ஊர் வவுனியா
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துஷ்யந்தி, வேலுப்பிள்ளை (14.06.1967) வவுனியாவில் பிறந்த வவுனியா மண்ணில் உருவாகிய முதலாவது நடனக் கலைமாமணி ஆவார். இவரது தந்தை கதிரவேலு; தாய் நவமணி. வவுனியா தமிழ் மத்திய மகா விததியாலயத்தில் உயர்தரம் கணிதப் பிரிவில் கற்ற இவர் நடனத்துறையில் இருந்த அதீத ஆர்வத்தினால் மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் நடனம் கற்று நடன கலைமாமணி பட்டம் பெற்றார்.

வவுனியாவில் வாழ்ந்த பிரபல நடன ஆசிரியையான திருமதி துவராகா கேதீஸ்வரன் அவர்களை குருவாகக் கொண்டு பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் நிகழ்ச்சிகளை நடாத்தி பாராட்டுக்களைப் பெற்றார்.

1991ஆம் ஆண்டு வன்னிப் பாரம்பரியம் என்ற இவரது நாட்டியத் தயாரிப்பு பலரது பாராட்டைப் பெற்றது. இந்த நடன நிகழ்ச்சி இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திலும் ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பரத ஷேத்திரம் என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு ஒரு மன்றத்தை தொடங்கி பல மாணவர்களை உருவாக்கியுள்ளதோடு வவுனியா மண்ணில் பரதக்கலை வளர்ச்சியில் இவர் பெரும் பங்களிப்புச்செய்து வருகிறார். பிரதேச, மாவட்ட இலக்கிய விழாக்களிலும் வேறு நிகழ்ச்சிகளிலும் இவரது பரத ஷேத்திரம் மன்றம் பங்களிப்பு செய்து வருகிறது. பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் அவர்களின் பெறா மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

நாட்டியக் கலை மாமணி, நாட்டிய எழில், நாட்டியக் கலா ஜோதி, பரத சிரோமணி.