ஆளுமை:தர்மராஜா, நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தர்மராஜா
தந்தை நாகலிங்கம்
பிறப்பு 1953.12.04
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தர்மராஜா, நாகலிங்கம் (1953.12.04 -) வவுனியா, பம்பைமடுவைச் சேர்ந்த எழுத்தாளர், பன்னூலாசிரியர். இவரது தந்தை நாகலிங்கம். இவர் அகளங்கன் என்ற புனைபெயரால் அறியப்பட்டார். இவர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதவிஞ்ஞானத்துறையில் இளமாணிப்பட்டத்தைப் பெற்று ஆசிரியரானார்.

இவர் பாடசாலைக் காலத்தில் கலை, இலக்கியத்துறையில் நாட்டங்கொண்டு வில்லுப்பாட்டு, பேச்சு, கவியரங்கு, நாடகம் எனப் பல நிகழ்வுகளில் பங்குபற்றியதுடன் 1970களில் எழுத்துத்துறையில் பிரவேசித்து சிரித்திரன் இதழில் 'இலக்கியச்சிமிழ்', இலக்கியத்தில் நகைச்சுவை' ஆகிய தொடர் கட்டுரைகளையும் ஈழநாடு பத்திரிகையில் 'வாலி கொலைச்சரமும் கேள்விச்சரமும்' என்ற இலக்கியத் தொடர்கட்டுரையையும் எழுதியுள்ளார். அத்துடன் முரசொலி, வீரகேசரி, தினகரன், தினக்குரல் உட்படப் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இலக்கியக் கட்டுரைகளை எழுதி வருகின்றார். இவர் 1980களில் ஏராளமான வானொலி நாடகங்களையும் மெல்லிசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்.

இவர் இலக்கிய ஆய்வாளனாவதுடன் ஜின்னாவின் இரட்டைக்காப்பிய ஆய்வு, மகாகவி பாரதியாரின் சுதந்திரப்பாடல்கள், பாரதியாரும் பாஞ்சாலி சபதமும், வாலி ஆகிய இலக்கிய ஆய்வு நூல்களையும் சின்னச் சிட்டுக்கள், சுட்டிக் குருவிகள், நல்வழி, ஆத்திசூடி, சிரிக்க விடுங்கள் முதலான சிறுவர் இலக்கியங்களையும் ஆக்கியுள்ளார்.

இவரது கலை, இலக்கியச் சேவைக்காக 1990 ஆம் ஆண்டு வவுனியா இந்து மாமன்றம் 'காவியமாமணி', விருதையும் 1993 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சு 'தமிழ்மணி' விருதையும் 1995 ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கம் 'தமிழறிஞர்' விருதையும் வழங்கிக் கெளரவித்ததுடன், இவரின் 'அன்றில் பறவைகள்' என்ற நாடக நூலிற்கு 1995 ஆம் ஆண்டு தேசிய சாகித்திய மண்டல விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 81-98
  • நூலக எண்: 1030 பக்கங்கள் 04-05
  • நூலக எண்: 2026 பக்கங்கள் 10-11