ஆளுமை:சௌந்தரவல்லி, தர்மலிங்கம்

From நூலகம்
Name சௌந்தரவல்லி, தர்மலிங்கம்
Birth 1945.11.05
Place சங்கத்தானை
Category கலைஞர்

சௌந்தரவல்லி, தர்மலிங்கம் (1945.05.11 - ) யாழ்ப்பாணம், சங்கத்தானையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் பாடசாலை இசை ஆசிரியர் எஸ். எஸ். இரத்தினம்பிள்ளையிடம் ஆரம்ப இசையைப் பயின்று பின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வி. சந்தானம், சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, ஐயாக்கண்ணு தேசிகர் ஆகியோரிடம் பயின்று கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் இசை ஆசிரியராகக் கடமையாற்றினார். மேலும் இலங்கை வானொலி, நல்லூர் இளங்கலைஞர் மன்றம், நல்லூர் கந்தசுவாமி கோவில், இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் முதலான இடங்களில் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 68