ஆளுமை:செல்வரத்தினம், மல்லிகாதேவி

From நூலகம்
Name மல்லிகா
Pages -
Pages -
Birth -1983
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்

'செல்வரத்தினம், மல்லிகாதேவி (1983) யாழ்ப்பாணம் அராலியில் பிறந்த எழுத்தாளர். ஆரம்ப கல்வியை அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலையிலும் வட்டு மத்திய கல்லூரியில் இடைநிலை கல்வியையும், உயர்கல்வியையும் கற்றார். யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தமிழ்த்துறையில் சிறப்புக்கலைப் பட்டம் பெற்றுள்ளார். சிறு வயது முதலே பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதி வருகிறார். ஊடகத்துறையில் ஆர்வம் காரணமாக உயர்தரம் கற்கும் போதே தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளராக செயலாற்றியவர். 2009ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை தினக்குரல் பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. தற்பொழுது வலி மேற்கு சங்கானை பிரதேச செயலகத்தில் சமுதாயஞ்சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றுகிறார். அத்துடன் சுயாதீன ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகிறார். எஸ்.மல்லிகா என்ற பெயரில் சிறுகதை, கட்டுரை, நாவல் ஆகியவற்றை எழுதி வரும் இவர் அராலியூர் நிலா என்ற புனை பெயரிலும் கவிதைகளும் எழுதி வருகிறார்.