ஆளுமை:செல்லையா, வைத்தியலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லையா
தந்தை வைத்தியலிங்கம்
தாய் சீனியம்மாள்
பிறப்பு 1878
இறப்பு 1940
ஊர் வண்ணார்பண்ணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா, வைத்தியலிங்கம் (1878- 1940) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை வைத்தியலிங்கம்; தாய் சீனியம்மாள். இவர் வித்துவசிரோண்மணி பொன்னம்பலப்பிள்ளையிடம் கல்வி கற்றவர். மலாயா நாட்டிலே ஈப்போ திருவள்ளுவர் கல்லூரித் தலைமையாசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் பழமைப் பனுவல் ஐம்பானைந்து, நல்லைச் சண்முகமாலை, வெங்கடேசப் பெருமாள் ஊஞ்சல், கதிரை நான்மணிமாலை, ஈப்போ தண்ணீர் மலை வடிவேலர் மும்மணிக்கோவை, வண்ணைத் திருமகள் பதிகம், அரிநாம தோத்திரம், நல்லை சுப்பிரமணியர் திருவிருத்தம், வடிவேலர் திருவிருத்தம், வடிவேலர் ஊஞ்சற் பதிகம், வடிவேலர் திருவருட்பத்து, மதுவிலக்குப்பாட்டு, ஒழுக்க மஞ்சரி, காந்தி இயன் மொழி வாழ்த்து, நாவலர் பதிகம், பதுமானிடக்கும்மி, ரமணமகரிஷி பஞ்சரத்தினம், பாலர் பாடல் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 06
  • நூலக எண்: 963 பக்கங்கள் 137-138