ஆளுமை:சிவபாதசுந்தரம், சோமசுந்தரம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபாதசுந்தரம்
தந்தை சோமசுந்தரம்பிள்ளை
பிறப்பு 1912.08.12
இறப்பு 2000.11.08
ஊர் ஊர்காவற்துறை
வகை ஊடகவியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாதசுந்தரம், சோமசுந்தரம்பிள்ளை (1912.08.12 - 2000.11.08) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை சோமசுந்தரம்பிள்ளை. இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுப் பின் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். 1930களில் குரும்பசிட்டி பொன்னையாவால் ஆரம்பிக்கப்பட்ட ஈழகேசரி பத்திரிகையில் ஆசிரியராக ஐந்தாண்டுகள் பணியாற்றிய இவர் 1941 ஆம் ஆண்டளவில் கொழும்பு வானொலியில் பணியில் சேர்ந்தார்.

பிபிசி தமிழோசை எனப் பெயரிட்டு தமிழ் நிகழ்ச்சியை பிபிசியில் ஆரம்பித்தவர்களில் இவரும் ஒருவர். பிபிசியில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு "ஒலிபரப்புக் கலை" என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் அமுத நிலையத்தாரால் 1954 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. இவர் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்து செயற்பட்டார். சென்னையில் 1959 ஆம் ஆண்டில் நடந்த அனைத்திந்திய எழுத்தாளர் மகாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவர். 1972 இல் ராஜமய்யரின் நூற்றாண்டு விழாக் குழுவின் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் ஒலிபரப்புக்கலை, கௌதமபுத்தர் அடிச்சுவட்டில் தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும், சேக்கிழார் அடிச்சுவட்டில் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 54-55
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 40-43