ஆளுமை:சின்னத்தம்பி, கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்தம்பி
தந்தை கந்தையா
தாய் சின்னப்பிள்ளை
பிறப்பு 1949. 12 .12
இறப்பு -
ஊர் மாங்கொலணி, மாங்கேணி,மட்டக்களப்பு
வகை வேட மதகுரு (கப்புறாளை)
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.



கந்தையா சின்னத்தம்பி (1949.12.12) இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திற்கு உட்பட்ட மாங்கேணி எனும் வேடர் தொல் கிராமத்தினை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேடக் கப்புறாளை (மதகுரு) இவரது தந்தை கந்தையா;சின்னப்பிள்ளை. இவரது மனைவி செல்லப்பாக்கியம். இவருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர். தனது ஆரம்ப காலக் கல்வியை மாங்கேணி அ.த.க பாடசாலையில் கற்றுள்ளார். ஆரம்ப காலம் முதல் இற்றை வரைக்கும் அவரது ஊரின் கைதேர்ந்த கப்புறாளையாகவும், கலையாடும் தேவாதியாகவும் காணப்படுகின்றார். தற்பொழுது தனது முதுமைக்காலத்தில் கூட வேடமொழியினை நன்கு பேசக்கூடியவராகவும், சடங்கு மையம் ஒன்றினை நடாத்துபவராகவும் காணப்படுகின்றார். அவ்வகையில் வாகரைப் பிரதேசங்களில் காணப்படுகின்ற சடங்கு மையங்கள் அனைத்திற்கும் சிறப்பாக அழைக்கப்படும் ஒரு முதுசமாகவும் காணப்படுகின்றார். தேனெடுத்தல், வேட்டையாடல் மற்றும் மீன்பிடி முதலான தொழில்களையும் இவர் செய்து வருகின்றார். அத்துடன் பழங்குடிகள் அமைப்பிலும் அங்கத்துவம் வகிப்பவராகவும் இவர் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.