ஆளுமை:சின்னத்தம்பி, அன்னலட்சுமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்னலட்சுமி
தந்தை சின்னத்தம்பி
தாய் தையல்நாயகி
பிறப்பு 1937
இறப்பு 2006.06.06
ஊர் யாழ்ப்பாணம்
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பி, அன்னலட்சுமி (1937) யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் பிறந்த சமூகசேவையாளர். இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் அன்னலட்சுமி. ஆரம்ப கல்வியை காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியிலும் மாவிட்டபுரம் வீமன்காமம் மகாவித்தியாலயத்திலும், சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1958ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து ஆசிரியர் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்தார். 01.01.1960ஆம் ஆண்டு களுத்துறை சாகிராக் கல்லூரியில் ஆசிரியர் பணியை ஆரம்பித்தார். 1971ஆம் ஆண்டு மகரகம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விசேட கல்வி டிப்ளோமா கற்கை நெறியினை சிங்கள மொழிமூலம் மேற்கொண்டார். இலங்கையில் கண்பார்வையற்ற மாணவர்கள் சாதாரண பாடசாலைகளில் ஏனைய மாணவர்களோடு இணைந்து கல்வி கற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் ஒரு முகப்படுத்தப்பட்ட கல்வித் திட்டம் 1972ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் தென்பகுதிகளில் ஒருமுகப்படுத்தப்பட்ட கல்வித்திட்டத்தின் கீழ் பணியாற்றுவதற்குப் பலர் முன்வந்தனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் இப்பணியினை முன்னெடுப்பதற்கு யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அன்னை அன்னலட்சுமி 01.01.1972ஆம் ஆண்டு யாழ் வந்து இவ் விசேட ஆசிரியர் பணியினைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதுவரை கைதடி நவீல்ட் பாடசாலையில் வெறுமனே ஆரம்பக் கல்வி மட்டுமே அளிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கிராமம் கிராமமாகச் சென்று பார்வையற்ற பிள்ளைகளை அடையாளம் கண்டு பாடசாலைக்கு அழைத்து வந்தார். இவரின் இம் முயற்சியின் காரணமாக எட்டு ஆண்டுகளில் செல்வி மங்களராணி கிறிஸ்தோபர் என்ற அவரின் மாணவி பட்டதாரியானார். அதனைத் தொடர்ந்து இவரின் சமூக சேவையின் ஊடாக 1990ஆம் ஆண்டு இவர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரின் ஓய்வுக்கு முன்னரே இவரின் சிந்தனையில் உருவான வாழ்வகம் சுன்னாகத்தில் தன் சொந்த வதிவிடத்திலேயே உதயமானது. இதன் வளர்ச்சிக்கு இவர் அரும்பாடுபட்டார்.