ஆளுமை:சதாசிவம், சேவியர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவம்
தந்தை சேவியர்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம், சேவியர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், சமூகத் தொண்டர். இவரது தந்தை சேவியர். இவர் நாவலர் பாடசாலை, யாழ் இந்துக் கல்லூரி, சென்பற்றிக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

உலகில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பயண நூல்களை எழுதி வருகின்றார். ஆரம்பத்தில் தீவகன் என்ற புனை பெயரில் இவர் எழுதிய சப்ததீவு நூலை அடிப்படையாக வைத்தே பலர் தீவுப்பகுதிகள் பற்றிய நூல்களை எழுதத் தொடங்கினார்கள். இவர் இந்தியத் திருத்தல யாத்திரை, தத்துவமுத்துக்களும் சமுதாயவித்துக்களும், கீதாசாரம், இஷ்ட தெய்வ வழிபாடு, நிம்மதிக்குப் பொன்மொழிகள், வாழ்க்கை வாழ்வதற்கே, சட்டமேதை ஜி.ஜி.பொன்னம்பலம் எனப் பல நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 244-245