ஆளுமை:சண்முகம்பிள்ளை, கந்தசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகம்பிள்ளை
தந்தை கந்தசாமி
தாய் தங்கமுத்து
பிறப்பு 1917.07.21
இறப்பு 2010.05.14
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம்பிள்ளை, கந்தசாமி (1917.07. 21 - 2010. 05.14) இணுவிலைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி; தாய் தங்கமுத்து. இவர் தென்னிந்தியா சென்று குற்றாலம் சிவனடிவேல் பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து மிருதங்கக் கலையின் நுட்பங்களைக் கற்றுக் கொண்டார். இவர் இலங்கை வானொலியில் 1942- 1976 வரை நிலைய வித்துவானாகப் பணியாற்றியவர்.

புகழ்பெற்ற தென்னிந்தியக் கலைஞர்களான வீணை பாலச்சந்தர், தஞ்சை கல்யாணராமன், மகாராஜபுரம் சந்தானம், திருப்பாம்புரம் சுவாமிநாதப்பிள்ளை, சித்தூர் சுப்பிரமணியம்பிள்ளை, ரி. என். கிருஷ்ணன் ஆகியோர்களிடம் பக்கவாத்தியம் வாசித்துப் புகழ்பெற்ற இவர், இலங்கையில் தலைசிறந்த மிருதங்கக் கலைஞர்களுக்கெல்லாம் ஆசிரியராக இருந்தவர்.'லயவாதி', 'கலாமான்ய', 'கலாபூஷணம்', 'கலாநிதி' ஆகிய பட்டங்களையும் பெற்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 564


வெளி இணைப்புக்கள்