ஆளுமை:கார்த்திகாயினி, சுபேஸ்

From நூலகம்
Name கார்த்திகாயினி, சுபேஸ்
Pages குலநாயகம்
Pages கருணாவதி
Birth
Place மிருசுவில்
Category எழுத்தாளர்

கார்த்திகாயினி, சுபேஸ் யாழ்ப்பாணம், மிருசுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குலநாயகம்; தாய் கருணாவதி. தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகக் கடமை புரிந்துள்ளார். இவர் உதயன், சஞ்சீவி, தினக்குரல், இடி ஆகியவற்றில் சிறுகதை, கவிதை, விமர்சனம் எழுதியுள்ளார்.

இவர் புலோலியூர் கலாபூசணம் க. சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியிலும் புதிய அலை வட்டம் நடாத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியிலும் முதற் பரிசைப் பெற்றார். விபவி கலாச்சார மையம் நடத்திய சிறுகதைப் போட்டியில் சான்றிதழ்கள் பெற்றுள்ளார். கருமுகில் தாங்கும் நிலவு இவரது சிறுகதையாகும்.

Resources

  • நூலக எண்: 1033 பக்கங்கள் 07