ஆளுமை:கவிதா

From நூலகம்
Name கவிதா
Pages கணபதிப்பிள்ளை
Birth
Place நயினாதீவு
Category எழுத்தாளர்

கவிதா குறிப்பிடத்தக்க ஈழத்துப் பெண் எழுத்தாளர். இவரது இயற்பெயர் நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை. முதுமானிப் பட்டதாரி. இவர் யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்தவர். 'வாழ்க்கையின் ரகசியம்' என்ற முதல் சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர். இவரது கதைகள் கலைச் செல்வி, வீரகேசரி, மலர், இலங்கை வானொலி போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. இவரது கணவர், வேதாந்தி என்ற பெயரில் ஈழ எழுத்துலகில் பிரபல்யமான ஜனுப் சேகு இஸ்ஸதீன்.

இவர் 'யுகங்கள் கணக்கல்ல' என்ற சிறுகதைத்தொகுப்பையும், 'கனவுகள் வாழ்கின்றன' என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 31