ஆளுமை:இளங்கோவன், புஷ்பராணி

From நூலகம்
Name புஷ்பராணி
Pages முத்தையா
Birth
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்

இளங்கோவன் புஷ்பராணி யாழ்ப்பாணம் சுன்னாகம் ஏழாலையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முத்தையா. தமிழ்ப்பிரியா என்ற புனைபெயரில் எழுதி வருபவர் இளங்கோவன் புஷ்பராணி. 1970ஆம் ஆண்டு சிறுகதையின் ஊடாக எழுத்துத்துறைக்குள் பிரவேசித்தார் எழுத்தாளர். சிறுகதை, நாடகம், மெல்லிசைப்பாடல், இசையும் கதையும், கவிதை என பன்முக ஆளுமைகொண்டவர் புஷ்பராணி. வானொலி மற்றும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் புஷ்பராணி இளங்கோவனின் சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகள் வெளிவந்துள்ளன. ஈழநாடு, சிந்தாமணி, சுடர், இந்திய சஞ்சிகைகள் இதயம் பேசுகிறது, குங்குமம், மங்கை போன்றவற்றிலும் இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளது. தினகரன், வீரகேசரி, ஈழமுரசு நாளிதழ் மல்லிகை, சிரித்திரன், கலாவல்லி, அமிர்தகங்கை சஞ்சிகைகள் ஆகியவற்றிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. திருமணத்தின் பின்னர் பிரான்ஸ் நாட்டில் கணவர் இளங்கோவனுடன் தற்பொழுது வசித்து வருகிறார். தொடர்ந்தும் இவரது ஆக்கங்கள் வெளிநாடுகளில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளது.

படைப்புகள்

  • காம்பு ஒடிந்த மலர் (சிறுகதைத் தொகுப்பு)

வெளி இணைப்புக்கள்