ஆளுமை:அஹ்மது பதுர்தீன், முஹம்மது ஸாலிஹ்

From நூலகம்
Name அஹ்மது பதுர்தீன்
Pages முஹம்மது ஸாலிஹ்
Birth 1956,.04.27
Place மாத்தறை
Category எழுத்தாளர்


அஹ்மது பதுர்தீன், முஹம்மது ஸாலிஹ் (1956.04.27 - ) மாத்தறை, வெலிகமையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை முகம்மது ஸாலிஹ். வெலிகம மாத்தறை அறபா தேசியக் கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் கல்வி கற்றார். பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் வெலியடி மாத்தறை ஸாஹிரா மஹா வித்தியாலயத்தின் ஆசிரியராகக் கடமையாற்றி வந்துள்ளார்.

இவர் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், சிறுவர் பாடல்கள், வானொலி நாடகம், மொழிபெயர்ப்புக் கதைகள், உருவகக் கதைகள், விமர்சனம் போன்ற பல துறைகளில் பங்களிப்புச் செய்து வருகின்றார். இவரது முதலாவது ஆக்கம் 1975 ஆம் ஆண்டு தினகரன் புதுக்கவிதைப் பூங்காவில் என்னே விருந்து என்னும் தலைப்பில் இடம்பெற்றது. இவர் எழுதியுள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் தினகரன், வாரமஞ்சரி, அல்ஹசனாத், கலையமுதம், அறிவமுதம் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

Resources

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 44-46