ஆளுமை:அஸ்மின், மர்ஹூம் உதுமாலெவ்வை

From நூலகம்
Name அஸ்மின்
Pages மர்ஹூம் உதுமாலெவ்வை
Pages ஆயிஷா
Birth 1983.05.02
Place அம்பாறை
Category எழுத்தாளர்


அஸ்மின், மர்ஹூம் உதுமாலெவ்வை (1983.05.02 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை மர்ஹூம் உதுமாலெவ்வை; தாய் ஆயிஷா. இவர் கவிதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், பாடல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். திரைப்படப் பாடலாசிரியராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வருகின்றார். கவிதைத் துறையில் சனாதிபதி விருது, அகஸ்தியர் விருது, கலைமுத்து விருது, கலைத்தீபம் ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கும் இவர், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு தடவைகள் பெற்றுள்ளார். செந்தூரம் என்ற செய்தித்தாள் இணைப்பிதழும், கவிஞன் என்ற இதழும் இவருடைய ஒளிப்படத்தை அட்டைப் படத்தில் இட்டுச் சிறப்பித்துள்ளன.


வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 31-34
  • நூலக எண்: 2081 பக்கங்கள் 09
  • நூலக எண்: 10209 பக்கங்கள் 31-34