ஆளுமை:அருட்பிரகாசம், முடியப்பு

From நூலகம்
Name அருட்பிரகாசம்
Pages முடியப்பு
Birth 1944.10.07
Place பாஷையூர்
Category கலைஞர்

அருட்பிரகாசம், முடியப்பு (1944.10.07 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட நாட்டுக்கூத்துக் கலைஞர். இவரது தந்தை முடியப்பு. நாட்டுக்கூத்து, இசைநாடகம் ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்டு நடித்தல், நட்டுவாங்கம் செய்தல், நாட்டுக்கூத்து, இசைநாடகங்கள் எழுதுதல் போன்ற செயற்பாடுகளில் முன்னிலை வகித்து வந்தார்.

தனது எட்டாவது வயதில் நாட்டுக்கூத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், 'அருள்' நாடக மன்றத்தை நிறுவி அதன் மூலம் பல வெற்றி நாடகங்களை மேடையேற்றியுள்ளார். பண்டார வன்னியன், தியாக ராகங்கள், சங்கிலியன் போன்றன இவரது நாட்டுக்கூத்து நூல்கள். இவர் எழுதிய மண்ணின் மைந்தர்கள் என்னும் நாட்டுக்கூத்து நாடகநூல் 2006 ஆம் ஆண்டிற்கான இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது கலைச் சேவையைப் பாராட்டி கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் கலைச் செல்வர் பட்டத்தையும் பாசையூர் உதயதாரகை கலை மன்றத்தினால் கூத்திசைப் பாவலர், பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினால் மரபுக் கலைச் சுடர் ஆகிய பட்டங்கள் வழ்ங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 166
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 124-125