ஆளுமை:அம்பலவாணர்

From நூலகம்
Name அம்பலவாணர்
Birth
Place புங்குடுதீவு
Category ஆசிரியர், அதிபர்

அம்பலவாணர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், அதிபர். இவர் நீண்டகாலம் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். இலக்கியவாதியாகவும் நகைச்சுவைப் பேச்சாற்றல் கொண்டவராகவும் விளங்கினார்.

நல்லூர் நல்லை ஆதீனத்தில் கந்தபுராண ஆஸ்தான வித்தகராகப் பல ஆண்டுகள் சேவையாற்றிய இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் கொடியேற்றத் திருவிழாவை 40 வருடங்களாகத் தொடர்ந்து நடத்தியவர். அத்துடன் தல்லயப்பற்று முருகன் கோவிலின் தர்மகர்த்தா சபை உறுப்பினராகவும் இவர் கடமையாற்றினார். கந்தபுராணக் கலாச்சாரத்தைப் புங்குடுதீவில் வளர்ப்பதிலும் பங்களித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200B