ஆளுமை:அன்ரன், யோசப் மரியநாயகம்

From நூலகம்
Name அன்ரன்
Pages யோசப் மரியநாயகம்
Birth 1944.06.04
Place ஊர்காவற்துறை
Category ஓவியர்

அன்ரன், யோசப் மரியநாயகம் (1944.06.04 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை யோசப் மரியநாயகம். இவர் ஸ்ரானி அபயசிங்கா, மொறிஸ் பெரேரா, விஜயசேகரா, எம். எஸ். கந்தையா, சிவராமலிங்கம் ஆகியோரிடம் ஓவியக் கலையைப் பயின்றுள்ளார்.

இவர் 1964 இல் சித்திர ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆசிரிய ஆலோசகர், தொலைக்கல்விப் போதனாசிரியர், ஆசிரியர்களுக்கான செயலமர்வுகளில் விரிவுரையாளர் பணிகளில் ஈடுபட்டார். இவரால் பல கத்தோலிக்கத் தெய்வச்சிலைகள் உருவாகியுள்ளன.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 233-234