ஆளுமை:அகிலன், பாக்கியநாதன்

From நூலகம்
Name அகிலன்
Pages பாக்கியநாதன்
Birth
Place அராலி
Category ஆய்வாளர்

அகிலன், பாக்கியநாதன் யாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர், ஆய்வாளர், விரிவுரையாளர். இவரது தந்தை பாக்கியநாதன். வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலை, நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலை, சென் ஜேன் பொஸ்கோ, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றில் (நுண்கலை) பட்டமும் பரோடா எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் கலை விமர்சனத்தில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்று விரிவுரையாளராகப் பணிபுரிகிறார்.

காண்பியக்கலைகள், நாடக அரங்கியல், மரபுரிமைக்கல்வி, ஆவணப்படுத்தல் ஆகிய துறைகளில் இவர் செயற்பட்டு வருகிறார். மக்கள் மத்தியில் மரபுரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உதயன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். உதயனில் வெளியான மரபுரிமை தொடர்பான இவரது கட்டுரைகள் காலத்தின் விளிம்பு (2015) எனும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பதுங்குகுழி நாட்கள் (கவிதைகள், 2000), சமரகவிகள் (கவிதைகள், 2010) ஆகியன இவரது ஏனைய நூல்கள். 'இலங்கைச் சமூகத்தையும் பண்பாட்டையும் வாசித்தல்: தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்' என்ற மூன்று பாகங்களை கொண்ட தொகுப்பு நூலின் இரண்டாம் மூன்றாம் தொகுதிகளுக்கும் 'வெ. சா. வாதங்களும் விவாதங்களும்' என்ற நூலுக்கும் இணைத் தொகுப்பாசிரியராகவும் பங்களித்துள்ளார்.

வெளி இணைப்புக்கள்

பா. அகிலன் பற்றி அருண்மொழிவர்மன்