ஆளுமை:மகாலஷ்மி, குருசாந்தன்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:46, 6 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகாலஷ்மி
தந்தை நாகசுந்தரம்
தாய் பாக்கியலஷ்மி
பிறப்பு 1968.08.24
ஊர் கிளிநொச்சி
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாலஷ்மி, குருசாந்தன் (1968.08.24) கிளிநொச்சியில் பிறந்த சமூகசேவையாளர். இவரது தந்தை நாகசுந்தரம்; தாய் பாக்கியலஷ்மி. ஆரம்ப, இடைநிலைக் கல்வியை மன்னார் பேசாலை பற்றிமா மகாவித்தியாலயத்திலும், உயர்நிலை கல்வியை சென் சேவியர் மகளிர் கல்லூரியிலும் கற்றார். மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றி வரும் மகாலஷ்மி பால்நிலை தொடர்பான இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெறும் சங்கட் பயிற்சிப்பட்டறையின் ஊடாக பயிற்சி பெற்றுள்ளார். 1990ஆம் ஆண்டு இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் ஊடாக ஈழத்தமிழர்களின் முகாமில் உள்ள பெண்களுக்கு உதவி செய்வது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்குதல், சிரமதானத்தின் ஊடாக சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருத்தில், சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். முகாம்களில் உள்ள சிறுவர்களுக்கு மாலைநேர இலவச வகுப்புக்களை மேற்கொள்ளல் என தனது சேவையை செய்து வந்துள்ளார் மகாலஷ்மி. இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியேறி பெண்களுக்கு சுயதொழில் வேலைத் திட்டங்கள் ஏற்படுத்திக்கொடுத்தல், பலநோக்கு சங்கம் அமைத்தல், முன்பள்ளி கட்டிக்கொடுத்தல், பனங்கட்டித் தொழிற்சாலை அமைப்பதற்குத் தேவையான உதவிகளை செய்தல் என பல வேலைத் திட்டங்களை பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ள கருவியாக இருந்துள்ளார். மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒன்றியத்தில் 1998ஆம் ஆண்டு தொடக்கம் நிர்வாகத்திலும் 2003ஆம் ஆண்டில் இருந்து திட்ட உத்தியோகத்தராகவும் 2007ஆம் ஆண்டு தொடக்கம் மன்னார் மாவட்ட இணைப்பாளராகவும் உள்ளார். பெண்கள் உரிமை சார்ந்த வேலைகளை செய்து வருகிறார் மகாலஷ்மி.