ஆளுமை:நடராசா, இளையதம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராசா
தந்தை இளையதம்பி
தாய் பார்வதி
பிறப்பு 1939.02.11
ஊர் கிளிநொச்சி, திருநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, இளையதம்பி (1939.02.11 - ) கிளிநொச்சி, திருநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி; தாய் பார்வதி. இவர் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். இவரது முதற் படைப்பான வாடா மல்லிகை தினபதிப் பத்திரிகையில் 1968 ஆம் ஆண்டு பிரசுரமானதுடன் 1968 ஆம் ஆண்டின் பின்னர் பூண்டுலோயாவிலிருந்து வெளிவந்த வெற்றிமணி, சஞ்சிகையில் பசுவும் கயிறும், முதலாளியும் தொழிலாளியும், இதயக் கோவிலும் இறைவழிபாடுகளும், தாயும் சேய்களும், திருவள்ளுவரும் திருக்குறளும் ஆகிய தத்துவக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவர் 75 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 200 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளதோடு 30 சிறுகதைகளைத் தொகுத்து மண்ணின் வேர்கள் என்னும் தலைப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 157-159