ஆளுமை:அழகானந்தன், மாணிக்கம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:55, 19 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அழகானந்தன்
தந்தை மாணிக்கம்
பிறப்பு
ஊர் அல்வாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அழகானந்தன், மாணிக்கம் யாழ்ப்பாணம், அல்வாயைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட நாடகக்கலைஞர். இவரது தந்தை மாணிக்கம். நாடகத்துறையில் நாட்டம் கொண்ட இவர் இக்கலையை மு. பொன்னையர், ச. தம்பிஐயா, மு. செ. விவேகானந்தன் போன்றோரிடம் பயின்றார்.

இவர் தனது தோழர்களுடன் இணைந்து மு. பொன்னையா அவர்களின் அண்ணாவியத்தில் பல நாடகங்களை நடித்துள்ளதோடு அல்வாயூர் கவிஞர் நாடகமன்றம், அல்வாய் மனோகரா நாடகசபா என்பவற்றில் இணைந்து கல்யாணப்பரிசு, சகோதர பாசம், நச்சுக்கோப்பை, தங்கைக்காக, இன்பக்கனவு, காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, அரிச்சந்திரா, ஶ்ரீவள்ளி, பவளக்கொடி, வாலிவதை, சீமேந்தினி, கோவலன் கண்ணகி, பூதத்தம்பி போன்ற நாடகங்களிலும் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 127