ஆளுமை:நூருல் சிபா, ஸாஹிர்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:31, 12 பெப்ரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நூருல் சிபா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நூருல் சிபா
தந்தை ரஷீட்
தாய் உம்மு ஸல்மா
பிறப்பு
ஊர் உடுதெனிய
வகை எழுத்தாளர்

நூருல் சிபா, ஸாஹிர் உடுதெனியவில் பிறந்த எழுத்தாளர் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டுள்ளார். இவரது தந்தை ரஷீத் அல்ஹாஜா; தாய் உம்மு ஸல்மா. இரண்டு பிள்ளைகளின் தாயுமாவார் நூருல் சிபா. ஆரம்பக் கல்வியை உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் இடைநிலை உயர் கல்வியை கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் கற்றார். தற்பொழுது ஆசிரியராக தனது தொழிலை மேற்கொண்டு வருகிறார். கொழும்பு பல்கலைக்கழகம், கொழும்பு திறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி நிலையம், தேசிய கல்வி நிறுவகம் போன்றவற்றில் கல்வி சார் உயர் கல்வியைப் பெற்றுள்ளார்.

பாடசாலை காலத்திலேயே கலை இலக்கியத்துறையில் ஈடுபட்டு வரும் இவரின் ஆக்கங்கள் வானொலி பத்திரிகைகள் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். ஆங்கிலத்தில் புலமை கொண்ட எழுத்தாளரின் ஆக்கங்கள் Sun Weekend, Daily news-Sunday observer, The Island, Sunday Women, Sunday Times ஆகிய நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன. ஆங்கில மொழியில் சிறுவர் இலக்கியத்திற்கான பரிசினையும் இவர் பெற்றுள்ளார்.