புதிய சுவடுகள்
நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:37, 30 மே 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (→{{Multi|வாசிக்க|To Read}}: -<!--ocr_link-->* [http://noolaham.net/project/03/225/225.html புதிய சுவடுகள் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->)
புதிய சுவடுகள் | |
---|---|
நூலக எண் | 225 |
ஆசிரியர் | ஞானசேகரன், தி. |
நூல் வகை | தமிழ் நாவல்கள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | வீரகேசரி வெளியீடு |
வெளியீட்டாண்டு | 1977 |
பக்கங்கள் | 6 + 220 |
வாசிக்க
- புதிய சுவடுகள் (707 KB) (HTML வடிவம்)
- புதிய சுவடுகள் (18.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
தி.ஞானசேகரனின் முதலாவது நாவல் இது. மூடநம்பிக்கைகளும் வரட்டுக் கௌரவமும் எப்படியெல்லாம் ஒரு அபலையின் வாழ்வைச் சூறையாடி விடுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நாவல் அமைகின்றது. சமூகக் கொடுமைகள் அவளை எதிர்த்தபோதும் இந்நாவலின் நாயகி துவண்டுவிடவில்லை. ஒரே இலட்சியத்திற்காக வாழ்ந்து தன் சுவடுகளை தாயக மண்ணில் அழியாமல் விட்டு மறைகின்றாள். இந்நாவல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப்பெற்றது. சாதியத்துக்கு எதிரான நாவல் என்ற வகையில் இது முக்கியமானது. இந்நாவலில் யாழ்ப்பாணக் கிராமியத்தின் மண்வாசனையை நன்றாகவே உணரமுடியும். இது 58ஆவது வீரகேசரி பிரசுரமாக முதலில் பிரசுரமானது. 2005இல் இதேநூல் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தினால் முதற்பதிப்பு எனக் குறிப்பிட்டு மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ளது.
பதிப்பு விபரம்
- புதிய சுவடுகள். தி.ஞானசேகரன். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், தபால் பெட்டி எண் 160, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1977. (கொழும்பு 14: Express Newspapers Ceylon Ltd., 185, Grandpass Road). 6 + 220 பக்கம், விலை: ரூபா 3.90, அளவு: 18 X 12 சமீ.
- புதிய சுவடுகள். தி.ஞானசேகரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2004. (சென்னை 94: Script Offset). xiv + 254 பக்கம், விலை: ரூபா 65., அளவு: 18 X 12.5 சமீ.
-நூல் தேட்டம் (3716)