பகுப்பு:மறுபாதி

From நூலகம்

மறுபாதி இதழ் 2009 ஆடி - ஆவணி - புரட்திடாதியில் வெளிவர ஆரம்பித்தது. கவிதைக்கான இதழாக இந்த இதழ் காலாண்டுக்கு ஒருமுறை மலர்ந்தது. இதன் ஆசிரியராக சித்தாந்தன் விளங்கினார். இணை ஆசிரியர்களாக சி.ரமேஷ், மருதம் கேதிஸ் விளங்கினார்கள். தரமான கவிதைகள், மொழிபெயர்ப்பு கவிதைகள், கவிதை பற்றிய விவாதங்கள், கவிதை நூல் அறிமுகங்கள்-விமர்சனங்கள், கவிதையின் பல்பரிமாணங்கள் பற்றிய கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. தொடர்புகளுக்கு: மறுபாதி, அரசடி வீதி, கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்.