பகுப்பு:தமிழ் ஒலி

From நூலகம்

தமிழ் ஒலி சஞ்சிகையானது தமிழ் ஒலி மன்ற வெளியீடாக வானொலி நேயர்களுக்காக 80 களின் நடுபகுதியில் யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவந்தது. இது வானொலி நேயர்களுக்கான காலாண்டு சஞ்சிகையாக வெளிவந்துள்ளது. இதன் பதிப்பாசிரியராக தம்பிஐயா தேவதாஸ் அவர்களும், உதவியாசிரியராக எஸ். உமாகாந்தன் அவர்களும் காணப்பட்டுள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக வானொலி ஒலிபரப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள் , வானொலி சம்பந்தமான விடயங்கள், கலை விடயங்கள், சமூக விடயங்கள் முதலான பல்சுவை விடயங்களைத் தாங்கி இந்த சஞ்சிகை வெளிவந்துள்ளது.