பகுப்பு:சைவ காவலன்

From நூலகம்

சைவ காவலன் பத்திரிகை 1969.9.15 இல் வெளிவர ஆரம்பித்தது. மாதாந்த பத்திரிகையாக இது மலர்ந்தது. அகில இலங்கை சைவ அனுட்டான பாதுகாப்பு சபையால் இந்த பத்திரிகை தெல்லிப்பழை யில் இருந்து வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஆசிரியராக அச்சுவேலி சிவசிறீ ச.குமாரசாமி குருக்கள் விளங்கினார். சைவ சமயம் சார்ந்த கட்டுரைகளுடன் , செய்திகளுடன் இந்த பத்திரிகை வெளியானது.