பகுப்பு:அஞ்சலி (வத்தளை)

From நூலகம்

'அஞ்சலி' இதழ் 1970களில் கொழும்பு, வத்தளையிலிருந்து வெள்வந்த தனித்துவமான பல்சுவை மாத இதழ். நிர்வாக ஆசிரியர் ஏ.எம்.செல்வராஜா. இதழின் வெளியீட்டில் 4ஆவது இதழ் மலையக சிறப்பிதழாகவும் 7வது இதழ் வடபகுதி சிறப்பிதழாகவும் 10ஆவது இதழ் கிழக்கிலங்கை சிறப்பிதழாகவும் வெளிவந்தது. இதழின் உள்ளடக்கத்தில் கவிதை, சிறுகதை, இலக்கிய கட்டுறை, நூல் அறிமுகம் என பல்சுவை அம்சங்களை தாங்கி வெளிவந்தது. ஒவ்வொரு சிறப்பிதழும் அப்பிரதேசங்களின் தனித்துவமான கலை, பண்பாடு, படைப்பாற்றல்களை பிரதிபலிப்பதாய் அமைந்தன.