பகுப்பு:ஃபீனிக்ஸ்

From நூலகம்

ஃபீனிக்ஸ் இதழானது ஈழப்போர்க்காலத்தில் வெளியிடப்பட்ட ஒரு நவீன கவிதா இதழாகும். 1996 ஆம் திரு . வி. மைக்கல் கொலின் என்பவரை பிரதம ஆசிரியராகவும், மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

இவ்வெளியீட்டில் காணப்படும் கவிதைகள் யாவும் ஈழப்போரினுள் சிக்கிமாண்ட, அதிலிருந்து மீளெலத் துடிக்கும் , போரினால் தேசம் விட்டு அன்னிய தேசம் துரத்தப் பட்டவர்களின் குரலாகவே காணப்படுகின்றன. இதற்கான அட்டைப்படங்களினை குணா மற்றும் பிரபு ஆகியோர் வரைந்துள்ளனர். இது ஒருயொரு வெளியீட்டுடன் நிறுத்தப் பட்டுள்ளது. தமது தேவையின் பொருட்டு எதுவித கால வரையறையும் இல்லாமல் ஃபீனிக்ஸ் தொடர்ந்தும் வெளியிடப்படும் என்வும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்காலகட்டதில் தமிழில் காணப்பட்ட நவீன கவிதைப் போக்கினை பூர்த்தி செய்வதற்கான ஒரு எத்தணிப்பாக இது வெளியிடப்பட்டிருக்கின்றது. ‘திரும்பத் திரும்ப மீண்டுவரல்’ எனும் ஃபீனிக்ஸ் பறவையின் தொன்மத்திற்கு அமைவாகவும், ஆசிரியரான மைக்கல் கொலின் அவர்களின் நட்பு வட்டங்களுடன் இணைந்த ஃபீனிக்ஸ் கலை இலக்கிய வட்டத்தின் பெயராகவுமே இவ்விதழக்கு ஃபீனிக்ஸ் எனும் பெயரிடப்பட்டுள்ளது.

Pages in category "ஃபீனிக்ஸ்"

This category contains only the following page.