நிறுவனம்:காந்தி சனசமூக நிலையம்

From நூலகம்
Name காந்தி சனசமூக நிலைய பொன்விழா மண்டபம்
Category சனசமூக நிலையம்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place அரியாலை
Address {{{முகவரி}}}
Telephone
Email
Website

அரியாலை வடமேற்க்கில் காணப்படும் 1999 ஆம் ஆண்டு கட்டப்பட்ட காந்தி சனசமூக நிலைய பொன்விழா மண்டபம் சுதந்திர இந்தியாவை உருவாக்கிய பாரத சிற்பி மகாத்மாகாந்தியின் ஞாபகார்த்தமாக 1950ம் ஆண்டு ஐப்பசி மாதம் 2ம் நாள் அக்காலத்தில் இலங்கை இந்திய தூதுவராக இருந்த திரு. வி. வி. கிரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையம் அகில உலக காந்திஜி ஞாபக நிதியிலிருந்து கிடைத்த நன்கொடைப்பணம் ரூபா 3000/= மூலம் கட்டப்பட்டதாகும். இதன் துரித வளர்ச்சியில் 1966ம் ஆண்டு மேற்படி நிலையத்திற்கு ரூபா 500/= பெறுமதியான நூல்களை அன்பளித்த இலங்கை இந்திய தூதுவர் திரு. மீசென் சர்ச்சார் மற்றும் சுமார் ரூபா 150/= பெறுமதியான நூல்களை உகந்தளித்த அரியாலை கொழும்புத்துறை முற்போக்கு வாலிபர் சங்கத்தினர் ஆகியோருக்கும் பெரும்பங்குண்டு என்றால் மிகையாகாது. 1966ம் ஆண்டு யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசத்தால் நிகழ்த்தப்பட்ட நாடகப்போட்டியில் முதலிடத்தை பெற்ற இந்நிலையம் ஆண்டுதோறும் நிலையவிழா, காந்திஜி நினைவு விழா ஆகியவற்றையும் தவறாது கொண்டாடி வருகிறது அத்துடன் பொதுஜனநன்மைக்காக இடையறாது பாடுபடும் இந்நிலையம் உதயம் எனும் கையேட்டு மாத இதழையும் நடாத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 1975ம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன் அதன் பின்னணியாக வெள்ளிவிழா அரங்கும் கட்டப்பட்டது. அதேபோல் 1999ம் ஆண்டு பொன்விழா மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இளைஞர்களின் ஒரு முயற்சியில் தற்போதுள்ள திறந்த வெளியரங்கு கரப்பந்தாட்ட மைதானத்திற்கு மேலதிகமாக விளையாட்டு மைதானமொன்றையும் பெற்றுள்ளது.