நிறுவனம்:ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம்

From நூலகம்
Name ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம்
Category சங்கம்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place நீர்வேலி
Address
Telephone
Email
Website

ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் 1927 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டும், அவர்களைப் பிரதிநிதப்படுத்தவும் இலங்கையின் வட மாகாணத்தில் உருவாக்கப்பட்ட ஒர் அமைப்பு ஆகும்.

இதில் யோவல் போல், எஸ்.ஆர். ஜேக்கப், ஏ.பி. இராஜேந்திரா ஆகியோர் இந்த அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களாக விளங்கினர். இவர்கள் அரச விசாரணைக் குழுக்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தில், கல்வியில், பொருளாதாரத்தில், அரச சேவைகளை அணுகுவதில் எதிர்நோக்கும் ஒடுக்குமுறைகளை, இடர்களை எடுத்துரைத்தனர்.

திரு போல் அவர்கள், “சர்வசன வாக்குரிமை படித்தவர்களுக்கு மட்டுந்தான் வழங்கப்பட வேண்டும்” என்று சேர் பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தலைவர்கள் கூற்றினை எதிர்த்து சர்வசன வாக்குரிமை சகலருக்கும் வேண்டும் என்று வாதிட்டார்"