நிறுவனம்:அரியாலை சனசமூக நிலையம்

From நூலகம்
Name அரியாலை சனசமூக நிலையம் 02
Category சனசமூக நிலையம்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place அரியாலை
Address {{{முகவரி}}}
Telephone
Email
Website

அரியாலை சனசமூக நிலையத்தின் புகைப்படம். 1949ம் ஆண்டு ஆனித்திங்கள் 12ம் நாளில் இவ்வூர் பெரியோர்களின் நன்முயற்சியால் இச்சனசமூக நிலையம் ஒரு சிறிய அறையில் ஆரம்பிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு பெரியதோர் கட்டிடத்தை கட்டி அதை தனது அலுவலகமாக்கி கொண்டது. 1963ம் ஆண்டு மாநகர சபையின் உதவியுடன் மாதர் சங்கம் ஒன்று நிறுவப்பட்டது. 1966ம் ஆண்டு அரசாங்க உதவியுடன் மாதர் சங்கம் ஒன்று நிறுவப்பட்டது. 1968ம் ஆண்டு கலை வளர்ச்சிக்கு உதவும் திறந்த வெளியரங்கம் ஒன்று நிறுவப்பட்டது. இவ்வாறு காலத்திற்கு காலம் படிப்படியான வளர்ச்சி படிகளை அரியாலை மக்களுக்கு வழங்கிவருகிறது இந்நிலையத்தின் ஸ்தாபகர்களாக Dr. கந்தையா, பொ. காசிப்பிள்ளை, க. பொன்னம்பலம் [முன்னாள் யாழ் நகர பிதா] ஆகியோர் விளங்குகின்றனர். 1954ம் ஆண்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் இந்நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. எமது ஊருக்கு மிக சேவை புரிந்த பெரியார் திரு. கனகரத்தினம் அவர்களின் பெயரில் ஒரு இல்லமும் எமது நிலையத்தின் முதலாவது தலைவரான வைத்திய கலாநிதி திரு. கந்தையா அவர்களின் பெயரில் ஒரு இல்லமும் உதயமாகியது. 1962ஆம் ஆண்டு எமது ஊருக்கு அரசியல் சமூக ரீதியான முன்னேற்றப்பணிகளை ஆற்றிய முற்போக்கு வாதியான திரு. குகதாசன் அவர்களின் பெயரில் பிறிதொரு இல்லமும் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வருடமே காசிப்பிள்ளை ஞாபகார்த்த திறந்தவெளி அரங்கிற்கு அத்திவாரமும் இடப்பட்டது. 1968ம் ஆண்டு இவ் அரங்கு பூர்த்தி செய்யப்பட்டு பல்வேறு கலைகள் நிகழ்வுகள் மேடை ஏறப் பயன்படுத்தப்பட்டது. நெசவு நிலையம் பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் ஆலய வளவில் நிலைய நிதியில் கட்டி இயங்க விடப்பட்டது நிலையப்படிப்பகம் திறந்த வெளி அரங்கோடு இணைத்து கட்டப்பட்டது. 1974ம் ஆண்டு நிலைய வெள்ளி விழாவை முன்னிட்டு வெள்ளிவிழா மண்டபமும் குமாரகுலசிங்கம் ஞாபகார்த்த மண்டபமும் கட்டிமுடிக்கப்பட்டன. சமூக சேவையின் அடிப்படையில் இந்த நிலையம் புங்கங்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பொது சந்தை ஒன்றை அமைத்தது. 1990ம் ஆண்டு இந்நிலைத்தில் அழகியதோர் பூங்கா அமைக்கப்பட்டது. நிலையத்துக்கு நற்சேவை புரிந்து காலம் சென்ற பெரியார்களான திரு. மகாதேவா, திரு. மாசிலாமணி, திரு. சோமசேகரம் அவர்களின் பெயர்களை இல்லங்களுக்குச்சூடி இல்லங்களின் பெயர்களை மாற்றம் செய்தது 1991ம் ஆண்டு தியாகி திலீபன் நினைவாக மகளிர் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. உள்நாட்டில் வாழும் எமது ஊர்மக்களின் நிதி அன்பளிப்புக்களாலும் வெளிநாடுகளில் செறிந்து வாழும் ஊரவர்களின் பெரும் நிதிகளாலும் இந்நிலையம் நாளொரு வண்ணமாக மேன்மேலும் வளர்ந்து வருகின்றது. வடமாகாணத்தின் பிரபல கல்லூரி விளையாட்டுக் குழுக்களில் முதன்மை வகிப்போரில் பலர் நம்மவரே என்ற பெருமை கொள்வதில் இந்நிலையத்தின் பங்களிப்பு இன்றியமையாதது ஆகும் அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் புகழீட்டிய ச. சத்தியமூர்த்தி, பொ. பஞ்சலிங்கம் ஆகியவர்களை உருவாக்கியது என்பதும் உண்மையே இந்நிலையம் சகல விளையாட்டுக்களிலும் நிரந்தரமான குழுக்களைக் கொண்டிருந்த இக்கழகத்தில் பெண்களும் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1974ம் ஆண்டு வெள்ளிவிழாவினையும் 1999ம் ஆண்டு பொன்விழா என பல்வேறு காலங்கள் பல்வேறு விழாக்களையும் வெகுவிமர்சையாக இந்நிலையம் கொண்டாடியுள்ளது அத்துடன் அவை தொடர்பான மலர்களும் வெளியிடப்பட்டமை இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் பண்புகளாகும். இவ்வாறு கலை, விளையாட்டு, கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, என அனைத்து துறைகளிலும் பிரத்தியோக கட்டமைப்புக் கொண்ட நிர்வாகக்குழுவின் அயராத சேவையால் நிலையம் பல்வேறு கட்டவளர்ச்சிப் படிநிலைகளை கண்டு வருகிறது. எனவே படிப்படியான தனது பரிணாம வளர்ச்சியின் மூலம் அரியாலை சனசமூக நிலையம் எமது மக்களின் சமூக வாழ்வியலில் பல்துறை முன்னேற்றங்களை ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றது என்றால் மிகையாகாது. 1968ம் ஆண்டு சனசமூக நிலைய சமாசத்தால்நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் அரியாலை சனசமூக நிலையம் முதற்பரிசை பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது ஆகும்.