நிறுவனம்ːகிளி/ பரந்தன் இந்து மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:18, 28 சூலை 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= கிளி/ பர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ பரந்தன் இந்து மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் பரந்தன்
முகவரி பரந்தன், கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருமூலரால் சிவபூமி எனப் போற்றப்பட்ட மணித்திரு நாட்டின் வளம் நிறையப்பட்ட வடமாகாணத்தின் மத்திய பகுதியாக விளங்கும் முல்லையும் மருதமும் நெய்தலும் விளங்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி வடக்குபிரதேசம் பரந்தன் பகுதியில் பச்சை பசேலென காட்சி தரும் கனி சூழ் குமரபுரம் கிராமத்தின் கண்டி வீதியில் இருந்து மேற்காக 500 மீற்றர் தொலைவில் குமாரபுரம் வீதியில் கிளி பரந்தன் இந்து மகா வித்தியாலயம் அமைந்துள்ளது. இது ஒரு 1C தர பாடசாலையாகும்.

இன்று பரந்தன் இந்து மகா வித்தியாலயம் என்று அழைக்கப்படும் பாடசாலை 1954 ஆம் ஆண்டு குமாரபுர விஸ்தரிப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அக்கிராமத்தின் நன்மை கருதி கரைச்சி சைவ வித்தியா விருத்தி சபையினரால் கிளிநொச்சி மாவட்டத்தில் 4 பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றில் ஒரு பள்ளியே குமரபுர பகுதியில் பரந்தன் இந்து ஆரம்பப் பாடசாலை பூநகரி வீதிக்கு தெற்குப்பக்கமாக யாழ்ப்பாண மேயர் துரைராசா அவர்களுக்கு சொந்தமான 22 ஏக்கர் காணியின் ஒரு பகுதியில் ஆத்தி மரத்தடியின் 30 அடி நீளம் கொண்ட கீற்றுக்கொட்டகையில் அமரர் கந்தையா இராசரத்தினம் எனும் ஆசிரியாரால் 14 மாணவர்களைக் கொண்டு இப்பாடசாலை தனது முதற் கட்ட செயற்பாடுகளை இனிதே ஆரம்பித்தது.

இதனை அடுத்து அக்காலத்தில் காரியாதிகாரியாக இருந்த D.R.O கடமையாற்றிய முருகேசு அவர்களினால் குமாரபுரம் கிராமிய விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் குமாரபுரத்தின் நடுப்பகுதியில் 5ஏக்கர் காணி பாடசாலைக்கு என வழங்கப்பட்டது. இக் காணியில் குமரபுரத்தைச் சேர்ந்த மக்களும் 5 ஆம் வாய்க்கால் பரந்தனைச் சேர்ந்த ஊர் மக்களினதும் பெரும் முயற்சியினால் துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஓர் முதிரை மரத்தின் கீழ் 60 அடி நீளம் கொண்ட ஓர் கீற்றுக்கொட்டகையில் 1955 ஆம் ஆண்டின் பிற்பட்ட காலப்பகுதியில் தனது சொந்தக்காணியில் முதல்வர் திரு.இராசரத்தினம் அவர்களும் உதவியாசிரியராக யாழ். சுதுமலையைச் சேர்ந்த பு+ரணம் என்பவருடன் சுமார் 60 மாணவர்களுடன் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு பள்ளிகள் ளாலும் அரச மயமாக்கப்பட்டது. பரந்தன் இந்து ஆரம்பப்பாடசாலையும் அரசால் பொறுப்பேற்கப்பட்டு பரந்தன் இந்து தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரில் இயங்கலாயிற்று.

1975 ஆம் ஆண்டு பங்குனி மாதம் முதலாம் திகதி இப்பள்ளியின் முதற்தலைமை ஆசிரியர் செல்வி கண்முகம் முத்தம்மா என்பவர் பணியை ஆற்றி 1958 ஆம் ஆண்டு கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்கு இடம் மாற்றலாகிச் சென்றார். இவரது சேவையினைத் தொடர்ந்து யாழ் குப்பிளான் எனும் இடத்தைச்சேர்ந்த திரு. செல்லையா என்பவர் முதல்வராகவும் அவரது பாரியாரான திருமதி நாகேஸ்வரி நடராசா என்பவரும் இப்பாடசாலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். அக்காலத்தில் முதல்வராக இருந்த திரு .சிவக்கொழுந்து என்பவர் கட்டடம் அமைக்கும் பொறுப்பை ஏற்று தனது பணத்தினையும் பயன்படுத்தி 60”x 16” அளவு கொண்ட கட்டிடத்தை அமைத்த பெருமைக்குரியவராக திகழ்ந்தார். முதல்வர் சிவக்கொழுந்து அவர்கள் 1965ம் ஆண்டு காலப்பகுதியில் இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து உருத்திரபுரத்தைச் சேர்ந்த திரு. நாகலிங்கம் என்பவரும் முதல்வராகப் பாடராலையைப் பொறுப்பேற்று சிறப்பாக நடாத்தி வந்தார். அவரைத் தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்குவிலைச் சேர்ந்த திரு.செ.கனகரத்தினம் என்பவர் முதல்வராகப் பொறுப்பேற்று வழி நடாத்தினார்.

இதன் பின்பு 1977 ஆம் ஆண்டு திரு. R.T.சுப்பிரமணியம் அவர்கள் முதல்வராக இருந்ததை தொடர்ந்து குமரபுரத்தில் வாழ்ந்த வரும் இக் கிராமத்தின் மீது பற்றுக் கொண்ட வருமாகிய திரு.மு.சுப்பையா என்பவர் சைவவித்தியா விருத்திச் சங்கத்தினால் பாடசாலை நடாத்தப்பட்ட காலத்தில் சேர்ந்து பாடசாலை அரசுடமையாக்கப்பட்ட போது அரசினர் ஆசிரியராக உள்வாங்கப்பட்டு சேவையாற்றினார். இக் காலப்பகுதியில் முதல்வர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்று அடுத்தமுதல்வர்கள் வரும் வரையிலான இடைப்பட்டகாலப்பகுதியில் பாடசாலையின் மீது மிகுந்த அக்கறை கொண்டு பாடசாலையினை நிலைகுலையாது ஒரு சீராக நடாத்தி பத்து வருடகாலம் உப அதிபராக இருந்தபெருமைக்குரியவர் இக் கிராமத்தில் வாழ்ந்து அமரத்துவம் அடைந்த திருவல்லிபுரம் பசுபதி அவர்களைச் சாரும். இவர்களைத் தொடர்ந்து இக் கிராமத்தினைச் சேர்ந்த திரு.க.பத்மநாதன் என்பவர் முதல்வராக கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது காலப்பகுதியில் பாடசாலைமிகச் சிறப்பாக வளர்ச்சியடைந்து வரும் வேளையில் 1984 ஆம் ஆண்டு தனி நிர்வாக மாவட்டமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. முதலாவது பிராந்திய கல்விப் பணிப்பாளரான ஜனாப் எம்.எம் மன்சூர் கடமையேற்றுக் கொண்டார். 1985 ஆம் ஆண்டு இப் பள்ளியினை தரமுயர்த்ததுவதற்கான முயற்சிகள் பள்ளி முதல்வராலும் பழைய மாணவர் சங்கத்தாலும் மேற்கொள்ளப்பட்டது. கல்விப் பணிப்பாளரான ஜனாப் எம்.எம் மன்சூர் அவர்களும் தனது சிபாரிசை வழங்கியதுடன் கல்வி அமைச்சின் அனுமதியினையும் பெற்றுத்தந்தார். இதன் பிரகாரம் 1986 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 26 ஆம் திகதி முதல் 1C பள்ளியாக (மகா வித்தியாலயம்) தரமுயர்த்தப்பட்டு கிளி /பரந்தன் மகா வித்தியாலயம் என பெயர் சூட்டப்பட்டது. இவ்வாறு பாடசாலை தரமுயர்த்தப்படுவதற்கு பெரும் முயற்சிகளைச் செய்து காரண கர்த்தாவாகத் திகழ்ந்தவர் அக்காலப்பகுதியில் முதல்வராகக் கடமையாற்றிய திரு.க. பத்மநாதன் அவர்களே ஆவார்.

தொடர்ந்து திரு. க.புண்ணியசீலன் என்பவர் முதல்வராகப் பாடசாலையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது காலப்பகுதியில் பாடசாலை பல்வேறு வழிகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு பெரு பெரு வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் திரு.வீ.கே. பரம்சோதி என்பவர் முதல்வராகப் பாடசாலையினைப் 1996 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது கந்தபுரம் இல.01 பள்ளி வளாகத்தில் தஞ்சம் புகுந்து அப்பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் பகுதியில் இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கத்தின் உதவியாலும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியாலும் தற்காலிக கொட்டகைகள் அமைத்து பாடசாலையின் செயற்பாடுகள் நடைபெறத்தொடங்கின. முதல்வராக திரு. வ.யோகநாதன் அவர்கள் பொறுப்பேற்று இன்னல்களுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து மிகுந்த சிரத்தின் மத்தியில் பள்ளி வளர்ச்சியில் பாதிப்பு வராது நடாத்தி வந்தார்.

இதனைத் தொடர்ந்து திரு செ.முத்தையா, திரு.சி.திரவியம் அவர்களுடன் பாடசாலை செயற்படத் தொடங்கியது. சிறிது காலத்தின் பின் முதல்வர் இடமாற்றம் பெற்றுச் செல்லப் பள்ளியின் முதல்வராக 2013.01.06 ஆம் நாளில் திரு.ம.பத்மநாதன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பாடசாலை பெரும் அழிவுகளை சந்தித்த வேளையிலும் மனம் தளராது ஊர் மக்களையும் ஒன்று சேர்த்து பள்ளியினை மீளவும் புதுப்பித்து செயற்பாடுகளை இனிதே நடாத்தி வந்ததுடன் பாடசாலையை கவின் நிலைக்கு மாற்றும் பொருட்டு பாடசாலையின் முன்றலில் ஓர் அழகான சிறுவர் பூங்கா ஒன்றையும் அமைத்து பாடசாலையினை சிறப்படையச் செய்தார். பாடசாலை வரலாற்றில் பல சாதனைகளை நிலைநாட்டியதுடன் வளர்ச்சிக்கம் அரும்பணியாற்றி பள்ளி முதல்வர் 2005.11.24 ஆம் நாள் பாடசாலைக்கால சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றார். இதனைத் தொடர்ந்து பாடசாலை முதல்வராக திரு. நல்லதம்பி சிவனேசர் கடமைகளைப் பொறுப்பேற்று சிறப்பாக நடாத்தி வந்தார். மீண்டும் ஊர் இடப்பெயர்வை சந்திக்க வேண்டிய நேரத்தில் உடமைகள் அனைத்தையும் விசுவமடுப் பகுதிக்கு நகர்த்தி அமைத்து பாடசாலை நடைபெற்று வந்தது. தன து சொந்த இடத்தில் 2010.01.10 ஆம் நாளில் அன்றைய முதல்வர் திரு.ந.சிவனேசன் தலைமையில் பள்ளி மீண்டும் ஆரம்பமாகியது. 2014.01.13 காலப்பகுதியில் முதல்வர் அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றார்.

அவரைத் தொடர்ந்து பாடசாலை முதல்வராக 2014.02.07 ஆம் நாளில் திரு.ஆறுமுகம் உதயணன் என்பவர் முதல்வராகக் கடமையினைப் பொறுப்பேற்று சிறப்பாக பாடசாலையினை நடாத்தி வரும் வேளையில் பாடசாலையின் ஆசிரியர் திரு.ந.தவனீசன் ஆசிரியர் அவர்களால் அழகிய சரஸ்வதிசிலையொன்று வடிவமைக்கப்பட்டு 03.10.2014 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இத்தருணத்தில் பாடசலையின் முதல்வர் திரு.ஆறுமுகம் உதயணன் அவர்கள் மேற்படிப்பிற்காக விடுப்பில் செல்ல தொடர்ந்து முதல்வராக 2015.02.16 ஆம் நாளில் சேதுபாண்டியன் அம்பிகைபாகன் அவர்கள் பாடசாலையினைப் பொறுப்பேற்று பாடசாலையின் வளர்ச்சியிலும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளிலும் அக்கறை கொண்டு தன்னை அர்ப்பணித்து பாடசாலையை வளர்த்துச் சென்றார்.

"அயலிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற அபிவிருத்தி திட்டத்தினூடாக, பாடசாலைக்குத் தேவையான வளங்கள் கணிசமான அளவு நிறைவேற்றப்பட்டுள்ளது. அவையாவன கனிஷ்ட இடைநிலை ஆய்வுகூடம் இரண்டு மாடிகள் கொண்டது. வகுப்பறை இரண்டு மாடிகள் கொண்டது. சிறு திருத்தம் 2 மில்லியன்.பெருதிருத்தம் 9.5 மில்லியன். ஆண், பெண் மலசல கூடங்கள்

இவ்வாறு பல வேலைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இப்பாடசாலையின் முன்னாள் அதிபரும் ஓள்வுநிலை வலயக்கல்வி அலுவலக திட்டமிடற் பணிப்பாளருமாகிய திரு. க.ம.பத்மநாதன் அவர்களின் குடும்ப உறவினர்களின் நிதியில் சுப்பையா ஞாபகார்த்த அரங்கினை (110”X 35”) அமைத்துத் தந்துள்ளார். இவ்வாறு வளத்தேவைகள் நிறைவேற்றப்பட்டன.

கல்விப்பெறுபேறுகளின் சாதனைகள் என நோக்கினால் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் இளந்திவாகர் தவதருணா 167 புள்ளிகளைப்பெற்றுள்ளார். க.பொ.த (சா.த) பெறுபேற்றில் சி.மிதுசா எனும் மாணவி 4A,2B,3C உயர் பெறுபேற்றைப் பெற்றார். க.பொ.த (உ.த) பெறுபேற்றில் ச.சஜிக்கா வர்த்தகப் பிரிவில் A,2B (மாவட்ட நிலை12), கலைப்பிரிவில் க.துஷாகரன் A, 2C (மாவட்ட நிலை48) ஆகிய உயர்பெறுபேற்றினைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்தனர்.

அத்தோடு பாடசாலையின் வடகிழக்கு மூலையில் உள்ள 4/3 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரச காணி பாடசாலைக்கு என பெறப்பட்டுள்ளது. மேலும் இவையெல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டுவது போன்று அமைந்த விடயம் அகில இலங்கையின் தமிழ்த் தினப்போடடியிலி அப்பாடசாலை மாணவி சி.யதுர்சனா எழுத்தாக்கப் போட்டியில் 2018 ஆம் ஆண்டில் முதலாம் இடம் பெற்று தேசிய நிலைப் போட்டிக்குச் சென்று வெற்றி பெற்று வந்தார். காவேரி கலா மன்ற நிதி அனுசரணையில் கூடைப்பந்தாட்டத்திடல் அமைக்கப்பட்டது.