ஆளுமை: பாலசிங்கம், சரவணை.

நூலகம் இல் இருந்து
Sharangan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:56, 5 ஜனவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலசிங்கம்
தந்தை சரவணை
தாய் தங்கம்மா
பிறப்பு 1948.06.04
ஊர் இருபாலை, யாழ்ப்பாணம்.
வகை அரங்க செயற்பாட்டாளர், இடதுசாரி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

[[படிமம்:|300px]]

பாலசிங்கம், சரவணை. (1948 - ) இருபாலை, யாழ்ப்பாணம். இவரது தந்தை சரவணை. தாய் யோகம்மா. இவர் கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரி தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார்.

1980ஆம் ஆண்டு தொடக்கம் சமூக,அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றார். சமூக அரசியல் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு நாடக செயற்பாட்டை முன்னெடுத்தவர். இவர் உழைப்பாளர் சங்கத்தில் அங்கம் வகித்தார். புன்னாலைக்கட்டுவன் தாழ்த்தப்பட்ட மக்களின் கூலி உயர்வுப்போராட்டத்தில் முன்நின்றுபோராடியவர். விடுதலைப்புலிகளின் பேராட்டகாலத்தில் நாடக செயற்பாட்டினூடாக பரப்புரைசெய்து சாதாரண மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்காக பேராடியவர்.

குளப்படிகாரர்கள் சிறுவர் நாடகம் உட்பட பல நாடகங்களை எழுதி நெறியாழ்கை செய்துள்ளார். ஓர் கிராமத்தின் பக்தி நெறிப்பயணம் எனும் புத்தகத்தில் ஓர் கிராமத்தின் 170 வருடகால வரலாற்றை பதிவு செய்துள்ளார். கிராமத்துச்சூரியன் வெளியீட்டகத்தை நிறுவியுள்ளார்.



வெளி இணைப்புக்கள்