ஆளுமை:வேலு, ஆண்டி

From நூலகம்
Name வேலு
Pages ஆண்டி
Birth 1949.12.16
Place கிளிநொச்சி, அக்கராயன்குளம்
Category பக்கவாத்தியக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வேலு, ஆண்டி (1949.12.16 -) கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பக்கவாத்தியகாரர். இவரது தந்தை ஆண்டி. இவர் கண்டியிலிருந்து கிளிநொச்சி நகர குடியேற்றத்தின் பின்னர் அக்கராயன் குளம் என்னும் ஊரிலில் குடியேறினார். இவர் அங்கு குடியேறக் காரணம் தனக்கென்று ஒரு தொழில் இல்லாமையும், காலநிலை ஓத்துக் கொள்லாமையும் ஆகும்.

இவர் 1993 ஆம் ஆண்டிலிருந்து பல நிகழ்வுகளுக்கு ஆர்மோனியம் வாசித்து வந்திருக்கின்றார். நாடகங்களுக்கு ஆர்மோனியம் வாசிக்கும்போது பிற்பாட்டும் பாடியுள்ளார். சின்னத்திரை சின்னராஜா அவர்களின் பெல்பொட்டம் செல்லம்மா, ஜஞ்சுநாள் காய்ச்சல் ஆகிய நாடகங்களிற்கு இவர் பிற்பாட்டும், ஆர்மோனியமும் வாசித்துள்ளார். ஆலயங்களில் பஜனைப் பாடல்களையும் பாடியுள்ளார். அத்தோடு மாணவர்களுக்கு பாடல்களை பயிற்றுவிக்கும் உன்னத சேவையைச் செய்துவரும் சமூகத் தொண்டனுமாவார். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய சிறப்பு விழாக்களில் இவர் ஆர்மோனியம் வாசிப்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

இவர்தம் ஆர்மோனிய கலையை பாராட்டி 2006 ஆம் ஆண்டு அக்கராயன்குள ஊர் மக்களால் ஆர்மோனியம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். அன்னாரது 15 வருடத்திற்கு மேலான கலை தொண்டை கெளரவித்து கரைச்சி பிரதேச கலாசார பேரவை 2014ஆம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச கலைஞர்களுக்கு வழங்கப்படும் கரைஎழில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.