ஆளுமை:வெள்ளையன், பெரிய கங்காணி

From நூலகம்
Name வெள்ளையன்
Pages பெரிய கங்காணி
Pages பெருமாயி
Birth 1918
Pages 1971.12
Place பொகவந்தலாவ
Category அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வெள்ளையன், பெரியகங்காணி (1918 - 1971.12 ) மலையகம், பொகவந்தலாவைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி. இவரது தந்தை பெரிய கங்காணி; இவரது தாய் பெருமாயி. இவர் தோட்டப் பாடசாலையிலும் பொகவந்தலாவ சென். மேரிஸ் பாடசாலையிலும் கண்டி திரித்துவக் கல்லூயிலும் கல்வி கற்றுள்ளார்.

1941 ஆம் ஆண்டு சிறிது காலம் பொகவந்தலாவ நகரில் கூட்டுறவுக் கடையில் பணியாற்றி வந்த இவர், ஹட்டனில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு 1955 இல் சர்வதேச தொழிற்சங்கச் சம்மேளனக் கூட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் பிரதிநிதியாகக் கலந்து கொண்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 7652 பக்கங்கள் 45-49