ஆளுமை:லக்சி, ஹரிஹரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லக்சி
தந்தை குணரத்தினம்
தாய் தயாநிதி
பிறப்பு 1990.04.25
ஊர் வவுனியா
வகை கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லக்சி, ஹரிஹரன் அநுராதபுரத்தில் பிறந்த கல்வியாளர் வவுனியாவை வசிப்பிடமாகக் கொண்டவர். தற்போது வவுனியாவில் வசித்து வருகின்றார். இவரது தந்தை குணரத்தினம்; தாய் தயாநிதி. ஆரம்ப இடைநிலை உயர்க் கல்வியை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலைச் சிறப்புப் பாடமாகப் பயின்று இளங்கலைமாணிப் பட்டத்தை பெற்றுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராகக் கடமை புரிந்து பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தன் திருகோணமலை வளாகத்தில் ஆய்வு உதவியாளராகப் பணி புரிந்து, தற்போது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நேத்ரா தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும் இருக்கின்றார். இவர் சமூகவியல் தொடர்பான கட்டுரைகள், விமர்சனங்கள், பெண்ணிய ஆய்வுகள், மொழிபெயர்ப்பு, சிறுகதை எழுதுதல் என்பவற்றில் ஈடுபட்டு வருகின்றார். பல்வேறு சர்வதேச மாநாடுகளில் சமூகவியல்சார் ஆய்வுகளைச் சமர்ப்பித்துள்ளார். இவரின் ஆக்கங்கள் இளங்கதிர் சஞ்ஞிகையிலும் உவங்கள் இணைய சஞ்சிகையிலும் காப்பு – ஈழத்துப் பெண் சிறுகதை எழுத்தாளர்கள் புத்தகத்திலும் வெளிவந்துள்ளன. பேராதனைப் பல்கலைக்கழத்தின் இளங்கதிர் 2014ஆம் ஆண்டு சஞ்சிகையின் பதிப்பாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். அத்துடன் வவுனியாவிலுள்ள பெரும்பாலான ஆலயங்களில் தேர்த்திருவிழா வர்ணனையாளராகவும் சொற்பொழிவாளராகவும் செயற்பட்டுச் சைவ சமயத்தின் வளர்ச்சிக்கும் உதவி புரிபவராக விளங்குகின்றார்


குறிப்பு : மேற்படி பதிவு லக்சி, ஹரிஹரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:லக்சி,_ஹரிஹரன்&oldid=326814" இருந்து மீள்விக்கப்பட்டது