ஆளுமை:யாழினி, யோகேஸ்வரன்'''

From நூலகம்
Name யாழினி
Pages யோகேஸ்வரன்
Pages பத்மாவதி
Birth 1987.09.29
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்கள்

யாழினி, யோகேஸ்வரன் (1987.09.29) யாழ்ப்பாணத்தில் பிறந்த கலைஞர். இவரது தந்தை யோகேஸ்வரன்; தாய் பத்மாவதி. ஆரம்பக்கல்வியை யாழ் வட்டு பிளவத்தை அமெரிக்கன்மிசன் பாடசாலையிலும், இடைநிலை, உயர் கல்வியை பண்டத்தரிப்பு உயர்தர பெண்கள் பாடசாலையிலும் கற்றார். கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வளாகத்தின் நாடகமும் அரங்கியலிலும் சிறப்புப்பட்டம் பெற்றுள்ளார். சிறுவயது முதலே நாடகத்தில் ஈடுபாடு கொண்ட கலைஞர் கவிதை, கட்டுரை, நேர்காணல் செய்வதன் ஊடாகவும் தனது பன்முகத் திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார். தினமுரசு, வீரகேசரி ஆகிய நாளிதழ்களிலும் பெண் சஞ்சிகை, ஜீவநதி, கலைமுகம் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. வடலியடைப்பு கலைவாணி கலைமன்றம் (தலைவர்) (2014), வடலியடைப்பு கலைவாணி இளைஞர் மன்றம் (உறுப்பினர் (2014), மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு (உறுப்பினர் (2016), வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையம் (நிர்வாக உறுப்பினர் )ஆகிய சமூக அமைப்புக்களுடன் இணைந்து சமூக சேவைகளையும் செய்து வருகிறார் கலைஞர். ”ஊடறு” பெண்கள் மாநாட்டினூடாக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கலையாக்கச் செயற்பாடுகளிலும் (மலேசியா, இந்தியா) கலந்துகொண்டுள்ளார் யாழினி. தற்பொழுதும் அரங்கச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் நெறியாள்கையில் உருவான நாடகங்களிலும் இவர் பங்களிப்புச் செய்து வருகிறார். பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராம மட்ட மக்களுக்காக விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் பயிற்சிப்பட்டறைகளும் இவரால் முன்னெடுக்கப்படுகிறது.

குறிப்பு : மேற்படி பதிவு யாழினி, யோகேஸ்வரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்