ஆளுமை:முகையதீன், உமர் லெப்பை

From நூலகம்
Name முகையதீன்
Pages உமர் லெப்பை
Pages மரிய நாச்சி
Birth
Place சாய்ந்தமருது
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகையதீன், உமர் லெப்பை கிழக்கு மாகாணத்திலுள்ள சாய்ந்தமருதை சேர்ந்த எழுத்தாளர் ஆவார். உமர் லெப்பை மரிய நாச்சி தம்பதிகளுக்கு சிரேஷ்ட புத்திரராக பிறந்தார் . அரபுத் தமிழ் புலமையில் தந்தையும் , பள்ளிக் கூடமே செல்லாது நாட்டார் பாடலிலும் நபி புகழ் பாடுவதிலும் புலமைத்துவம் பெற்றிருந்த தாய்க்கும் மகனாகப் பிறந்த இவரிடம் இலக்கிய நயமும் இரசனையும் இயற்கையாகவே ஒட்டிக் கொண்டதில் வியப்பில்லை. தமது கல்வியை கல்முனை கார்மேல் பாத்திமாக் கல்லூரியில் ஆங்கிலமொழி மூலம் பெற்று கல்விப் பொதுத்தராதரப்பத்திரப் பரீட்சையில் சிறப்புச்சித்தி பெற்றார் . இதனால் 1952-04-20ம் திகதி ஆங்கில உதவி யாசிரியராக நியமனம் பெற்றார் . அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் , யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் சிறப்புப் பயிற்சியைப் பெற்று பயிற்றப்பட்ட முதலாந்தர ஆசிரியராகவும் . சிரேஷ்ட உதவியாசிரியராகவும். பிரதி அதிபராகவும், முதலாந்தர அதிபராகவும். கொத்தணிப் பாடசாலைகளின் அதிபராகவும் சுமார் 39 வருடங்கள் ( 1952.04.20 தொடக்கம் 1990.12.31 ) வரை கல்விக்காக பாடசாலைகளின் வளர்ச்சிக்காக நல்மாணாக்கர்களை உருவாக்கும் பணியில் அயராது பாடுபட்டார். ஆசிரியர் பதவியில் இருந்து 1991.01.01 ல் இளைப்பாறிய போதும் உயர்தர மாணவர்கட்கு இலவசமாக ஆங்கிலம், சிங்களம், தமிழ் இலக்கியம் கற்பிப்பதிலும் தட்டச்சுக்கலையைப் பயிற்றுவிப்பதிலும். ஆசிரியர் சேவையில் இருந்து இளைப்பாறிய ஆசிரியர்கள், அதிபர்களின் ஓய்வூதியக் கணிப்பீடுகளை செய்து கொடுப்பதுடன் இளைப்பாறிய ஊழியர்களின் சங்கத்தின் செயலாள ராகவும் செயற்பட்டார் . இவரின் எழுத்துக்கள் இவரது மரணத்தின் பின்னரே தொகுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.