ஆளுமை:பேரம்பலம், ஞானகுமார்

From நூலகம்
Name ஞானகுமார்
Pages பேரம்பலம்
Pages புஸ்பலீலா
Birth 1981.02.23
Place கிளிநொச்சி
Category சமூக சேவையாளர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானகுமார், பேரம்பலம் (1981.02.23 -) கிளிநொச்சியைச் சேர்ந்த சமூக சேவையாளர், ஆசிரியர். இவரது தந்தை பேரம்பலம்; தாய் புஸ்பலீலா. இவர் ஆரம்ப கல்வியை இவர் 12 வயதில் படிப்பை விட்டுவிட்டு தாயக விடுதலை போராட்டத்திற்காக தானாக முன்வந்து தன்னை இணைத்து கொண்டார்.அந்த காலத்தில் அதாவது 1993 இல் பாதைகள் கிரவல் வீதிகளாக இருந்தது சில பாதைகள் தார் ஊற்றப்பட்டு காணப்பட்டது.ஆனால் அங்கு சிறுவர் போராளிகளுக்கு போராட்டத்திற்கு அனுமதிக்காமல் அவர்களை படிப்பினை மேற்கொள்வதற்காக தலைவர்களால் பணிக்கப்பட்டு 18 வயதிற்கு பின் அவரின் விருப்பத்திற்கு அமைவாக போராட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.1999 ம் ஆண்டு எதிர்பாராத விதமாக குண்டு தாக்குதலில் இரு கண்ணையும் இழந்தார். பின்னர் இவர் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் மேற்கொண்டார்.

2002 ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலிருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அதாவது காயப்பட்டவர்களின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு அவர்கள் சமூகத்தில் மீண்டும் சுதந்திரமாக வாழ வேண்டும் என கருதி அவர்களுக்கு கிருஷ்ணாபுரம் பகுதியில் வைத்து பல்வேறு துறை கல்விகள் வழங்கப்பட்டது .இதில் இவர் கணினி கற்கை நெறியை தொடர்ந்தார். பின் இவர் பார்வையற்றவர்களுக்கு கணினி கற்கை வழங்கிகொண்டிருக்கின்றார்..தற்போது வன்னி விழிப்புலனற்றோர் சங்க தலைவராக பணியாற்றி கொண்டிருக்கிறார் .

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 70
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 42-43


வெளி இணைப்புக்கள்