ஆளுமை:பாலேஸ்வரி, நல்லரெட்ணசிங்கன்

From நூலகம்
Name பாலேஸ்வரி, நல்லரெட்ணசிங்கன்
Pages பாலசுப்பிரமணியம்
Pages கமலாம்பிகை
Birth 1929.12.07
Pages 2014.02.12
Place திருகோணமலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Baleesvari.jpg

பாலேஸ்வரி, நல்லரெட்ணசிங்கன் (1929.12.07 - 2014.02.12) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பாலசுப்பிரமணியம்; தாய் கமலாம்பிகை. இவர் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, திருகோணமலை புனித மரியாள் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். தொடர்ந்து மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்துக் கொண்டு ஆசிரியப் பணியை மேற்கொண்டார்.

40 வருடங்களுக்கு மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வந்த இவர், 200 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளதோடு சுமைதாங்கி, தெய்வம் பேசுவதில்லை ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவரது முதலாவது நாவலான சுடர்விளக்கு 1966 இல் வீரகேசரியில் வெளியானதைத் தொடர்ந்து பூசைக்கு வந்த மலர், உறவுக்கப்பால், கோவும் கோயிலும், உள்ளக்கோயில், பிராயச்சித்தம், மாது என்னை மன்னித்துவிடு, உள்ளத்தினுள்ளே, எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு, தந்தைவிடு தூது, நினைவு நீங்காதது, அமலா உனக்காக ஆகிய 12 இற்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். 1957ம் ஆண்டு இவரது முதற் சிறுகதையான “வாழ்வளித்த தெய்வம்” தினகரனில் வெளிவந்தது. இவர் எழுதிய “பூஜைக்கு வந்த மலர்” என்னும் நாவல் வெளியிட்டு, இரண்டாவது திங்களே மறுபதிப்பையும் வெளியிட்டு சாதனை ஏற்படுத்தியிருந்தது.

இவர் தமிழ் மணி, சிறுகதைச் சிற்பி, ஆளுனர் விருது, கலாபூசண விருது ஆகிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.அவரது சிறந்த படைப்புக்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், 1992ம் ஆண்டு ஸ்ரீலங்காவின் இந்துக் கலாச்சார அமைச்சு தமிழ் மணி எனும் உயர் விருதை வழங்கியிருந்தது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 17-22
  • நூலக எண்: 397 பக்கங்கள் 04-06
  • நூலக எண்: 2043 பக்கங்கள் 34-35