ஆளுமை:பாக்கியரெத்தினம், ஆறுமுகம்

From நூலகம்
Name பாக்கியரெத்தினம்
Birth
Place திருப்பழுகாகமம்
Category கலைஞர்

பாக்கியரெத்தினம், ஆறுமுகம் மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் பிறந்த பெண் ஆளுமை ஆவார். பாடசாலைக் காலத்திலிருந்தே மிகுந்த பேச்சாற்றல் மிக்கவர். பாடுதல், ஆடுதல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். இலங்கையில் பல பாகங்களிலும் தொடர்ந்து இந்து மதத்தின் ஆழமான தத்துவக் கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு மூலாதாரம் கொண்டு விளக்கம் கொடுத்து வந்துள்ளார்.

இவர் எழுதிய அ்ம்மா சாரதாதேவி அவதார மகிமை, சுனாமி ஏன் வந்தது போன்ற பல ஆக்கங்கள் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்துள்ளன. வானொலியில் சைவநற்சிந்தனை, திருப்பழுகாகமத்தை பற்றிய பாடலை இயற்றிப் பாடியுள்ளார். இப்பாடல் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இவர் ஒரு் ஓய்வு பெற்ற ஆசிரியருமாவார்.


விருதுகள்

செந்தமிழ் கலைமாணி

இந்து தத்துவ ஆய்வுச்சுடர்

சைவத்தென்றல்

Resources

  • நூலக எண்: 9547 பக்கங்கள் 55