ஆளுமை:திரேசம்மா, ஜோசவ்

From நூலகம்
Name திரேசம்மா
Birth
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்

திரேசம்மா, ஜோசவ் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பிறந்த கலைஞர். கொழும்புத்துறை கூத்துப் பாரம்பரியத்தில் இருந்து வந்த பெண் அண்ணாவியார் ஆவார். சிறுவயதில் இருந்து கூத்துக்களில் நடித்து வந்தவர். மத்தேகமவுறம்மா, எஸ்த்தாக்கியர், ஜெனோவா, நொண்டி, பண்டாரவன்னியன், கிறிஸ்தோப்பர், தியாகராகங்கள் போன்ற பல கூத்துக்களை நெறிப்படுத்தியவர். தியாகராகங்கள் என்ற கூத்தினை இவரே எழுதி அண்ணாவியராக இருந்து நெறிப்படுத்தியவர். 1975ஆம் ஆண்டு நொண்டி நாடகத்தினை அண்ணாவியார் பாலுவிலுப்பிள்ளையுடன் இணைந்து இலங்கை வானொலியில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியவர்.

விருதுகள்

திருமறைக்கலாமன்றம் 1993ஆம் ஆண்டு நடத்திய அண்ணாவிமார் கௌரவிப்பு விழாவில் இவரும் கௌரவிக்கப்பட்டார்.